×

கோவை இ.எஸ்.ஐ-யில் மீண்டும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு

கோவை, ஜன. 11:  கோவை  இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இ.எஸ்.ஐ அட்டைதாரர்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். இது குறித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது: இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 665 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சை, கொரோனா சிகிச்சைக்குப் பின் கவனிப்பு, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கான புறநோயாளிகள் பிரிவு என பல்வேறு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9,778 பேர் சிகிக்சைப் பெற்றுள்ளனர். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 15 முதல் 20-ஆக குறைந்துள்ளது. இதனால், 500 படுக்கைகளுக்கும் மேல் காலியாகவுள்ளன. கொரோனாவில் குணமடைந்தவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் வாரத்துக்கு 50 முதல் 60 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இ.எஸ்.ஐ. அட்டைதாரர்களுக்கு மீண்டும் இங்கேயே சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், இ.எஸ்.ஐ. அட்டைதாரர்களுக்கு தனி கட்டடத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Coimbatore ESI ,
× RELATED நர்சுகள் காலில் விழுந்து கண்ணீர்...