எமரால்டு காவல் நிலையம் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

ஊட்டி, ஜன. 11: ஊட்டி எமரால்டு காவல் நிலையம் சார்பில் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊட்டி அருகே எமரால்டு காவல் நிலையம் சார்பில் எமரால்டு பஜார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எஸ்ஐ கார்த்திக் தலைமை வகித்து பேசுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து வந்தாலும், முழுமையாக நீங்கி விடவில்லை. எனவே பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடித்ததுடன், கைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும், என்றார். தொடர்ந்து பொதுமக்கள் கட்டாயம் போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றே வாகனங்கள் இயக்க வேண்டும். அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக இயக்குவது, மது அருந்து விட்டு வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதில் போலீசார் தனசேகர், ஜாகீர் அப்பாஸ், மணிசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>