×

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலுக்கு செல்ல தொழில் வழிச்சாலை அருகே புதிய சாலை அமைக்க வேண்டும்

*ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ உறுதி

ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலுக்கு, தொழில்வழிச்சாலை அருகே எளிதாக வந்து செல்லும் வகையில் புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அப்பகுதியை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாயத் தலங்களில் ஆறாவது ஸ்தலமாகும். இக்கோவில் நவகிரகங்களில் சனி பகவானுக்கு உரிய பரிகார தலமாகக் கருதப்படுகிறது.

இங்கு சனி பகவானுக்குத் தனிச்சன்னதி உள்ளது. இக்கோவில் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 24 கி.மீ. தொலைவில் ஸ்ரீவைகுண்டம் நகரின் வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது.

நெல்லை-திருச்செந்தூர் செல்லும் வழியில் கருங்குளத்திலிருந்து கொங்கராயகுறிச்சி வழியாக ஆழ்வார்திருநகரி வரை தற்போது அரசு பேருந்துகளை தவிர மற்ற அனைத்து வாகனங்களும் அதிகளவில் சென்று வருகின்றன.

இதை வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே செல்லும் தொழில்வழிச்சாலை மிக அருகில் கைலாசநாதர் கோயிலும் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் ஒரு இணைப்பு சாலை அமைத்தால் பக்தர்கள் எளிதாக கோவிலுக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும் என்பதால் உடனடியாக சாலை அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையின்படி ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் அருகே தொழில் வழிச்சாலை பகுதியில் இணைப்பு சாலை அமைப்பதற்கான இடங்களை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டார். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில், ஸ்ரீவைகுண்டம் ஆய்வாளர் நிஷாநீதினி, ஏரல் ஆய்வர் நம்பி, கைலாசநாதர் கோயில் செயல்அலுவலர் ரமேஷ், ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லகண்ணு, மாவட்டத் துணைத்தலைவர் சங்கர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் எடிசன், சிவகளை பிச்சையா, வட்டாரத் தலைவர்கள் ஜெயசீலன், ஜெயராஜ், கோதண்டராமன், நகரத் தலைவர் கருப்பசாமி, வெள்ளூர் கிராம கமிட்டி தலைவர் மகேஷ் ஸ்ரீவைகுண்டம் தொகுதி ஜேம்ஸ், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், முன்னாள் வட்டாரத் தலைவர் சிங்கப்பன், நிர்வாகிகள் நிலமுடையான், சரத்பாலா, மாவட்ட சேவாதள தலைவர் பிச்சைக்கண்ணு, நகரத் தலைவர் சித்திரை உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Srivaikundam Kailasanathar Temple ,Urvasi Amritraj ,MLA ,Srivaikundam ,Urvasi Amritaraj ,Kailasanathar Temple ,
× RELATED சிவகாசி அருகே பள்ளி நிர்வாகி வீட்டில்...