×

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுத்திறன் போட்டி

சேலம், ஜன.11: நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுத்திறன் போட்டி, இணையவழி மூலம் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை கல்லூரி முதல்வர் சீனிவாசன் முன்னிலையில், ஒருங்கிணைப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “உனக்குள் ஒரு கலாம்-2021” என்ற தலைப்பில், இணைய வழியில் நடைபெறும் இப்போட்டியில், வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ₹25 ஆயிரம் வழங்கப்படுகிறது. 2ம் பரிசாக ₹15 ஆயிரம் மற்றும் 3ம் பரிசாக ₹10 ஆயிரம் தலா 2 பேருக்கு வழங்கப்படுகிறது. சுயசார்பு இந்தியா, தூய்மை மற்றும் பசுமை இந்தியா, இந்தியாவுக்கான கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் ஏதேனும் ஒன்றில் 3 நிமிடம் பேசிய வீடியோவை இணைய வழியாக(http://bit.ly/kiotkalaminyoulevel1 என்ற முகவரிக்கு) அனுப்ப வேண்டும். வரும் 24ம் தேதி முதல்சுற்றில் பங்கேற்கும் 5 ஆயிரம் பேரில் வெற்றி பெறும் 600 பேர், 2ம் சுற்றுக்கு தகுதி பெறுவர். இதில், வெற்றிபெறும் 20 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவர். இறுதிச்சுற்றில் பங்கேற்கும் மாணவர்கள் இணையவழியில் நேரடியாக, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நடுவர்களின் முன்னிலையில், தங்களது பேச்சுத்திறமையை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ...

Tags : school students ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்