ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு 6 பேர் மீது வழக்கு பதிவு

சேந்தமங்கலம், ஜன.11: சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டி ஊராட்சி மேதர்மாதேவியில் 13 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து வீடுகள், மாட்டு கொட்டகை, குப்பை தொட்டி கட்டியும், கிணறு அமைத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் அங்கன்வாடி மையம் கட்ட உள்ளதால், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் அருள் ராஜேஷ், வருவாய்த்துறையில் மனு கொடுத்திருந்தார்.

நேற்று முன்தினம், சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி முன்னிலையில் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் அகற்றினர். அப்போது தனபால் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் இயந்திரம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மர்ம நபர்கள் சிலரால் அங்கிருந்த வைக்கோல் போருக்கு தீ வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய சேந்தமங்கலம் போலீசார், ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த தனபால் உட்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>