×

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு டிட்வா புயலை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, டிட்வா புயல் காரணமாக அதிகனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 14 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் முதல்வர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றும் (29ம் தேதி), நாளையும் தெற்கு பகுதிகளிலும், டெல்டா பகுதிகளிலும் கடுமையான மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். எல்லா மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்பி வைத்திருக்கிறோம். சென்னைக்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்களா? சென்னையில் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?

சென்னையும் பாதிக்கப்படும். சென்னையிலும் அதிகம் மழை பெய்யும் என்று சொல்கிறார்கள். நேற்று பேசும்போது, ஏழைகள் அதிகளவில் பாதிக்கப்பட கூடாது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பேசியிருந்தீர்கள். இதற்கான முகாம்கள், உணவுப்பொருட்கள் தயார் நிலை பற்றி? தேவையான இடங்களில் முகாம்களும், அங்கு உணவுகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் திறந்துவிடும் நேரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. பொறுப்பு அமைச்சர்கள், கண்காணிப்பு அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா?

ஏற்கனவே அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அதை கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்கள். டெல்டா மாவட்ட மக்களை தமிழக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்லிவருகிறார். அதுபற்றி? அவர் வஞ்சிக்காமல் இருந்தால் போதும். அதான் முக்கியம். அவர் சொல்லிக்கொண்டுதான் இருப்பார். அதுபோன்று எதுவும் கிடையாது. அவர் எப்போதும் அப்படிதான் சொல்லிக்கொண்டு இருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. புயலை எதிர்கொள்ள எல்லாவற்றிலும் தயாராக இருக்கிறதா? தயாராக இருக்கிறோம்.

Tags : Chief Minister ,MK Stalin ,Cyclone ,Chennai ,State Emergency Operations Centre ,Ezhilakam, Chennai ,Cyclone Titva ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும்...