கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் கொள்ளை

கிருஷ்ணகிரி, ஜன.11: குருபரப்பள்ளி அம்மன் நகரை சேர்ந்தவர் ஜோதிபிரதாப்(23). இவர் அதே பகுதியில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர், கடையின் பூட்டை உடைத்து, 2 செல்போன்கள், ஒரு ஹெட்செட், ஒரு பவர் பேங்க் என ₹24 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் பார்த்து, கையும் களவுமாக வாலிபரை பிடித்து, கடையின் உரிமையாளர் ஜோதிபிரதாபிற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர் வாலிபரை பொதுமக்களின் உதவியுடன் குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி எஸ்எஸ்ஐ மாதேஸ்வரன் நடத்திய விசாரணையில், அந்த நபர் சிக்காரிமேடு கிராமத்தை சேர்ந்த அக்பர்கான்(36) என்பது  தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>