எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

கிருஷ்ணகிரி, ஜன.11: தமிழக விவசாயிகள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சென்னைய நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: கிருஷ்ணகிரி மாவட்டம் மாரசந்திரம் அணைக்கட்டில் இருந்து, படேதலாவ் ஏரிக்கு வரும் தண்ணீர், படேதலாவ் ஏரி முதல் காட்டகரம் ஏரி வரை 13 ஏரிகளுக்கு சென்டையும் வகையில், புதிய கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், பருவமழை இல்லாததால் மாரசந்திரம் அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள எண்ணேகொள் அணைக்கட்டை உயர்த்தி கட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தும்பலஅள்ளி அணைக்கும், வடக்கே படேதலாவ் ஏரி வரையும் புதிய கால்வாய் அமைத்து, அவ்வழியில் பல ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் அமைத்து, தண்ணீர் சென்றடைய உரிய நடவடிக்கை மேற் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகளோ கால்வாய் அமைப்பதற்கு சர்வே செய்து, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி வருவதாக கூறுகின்றனர். கடும் வறட்சியால் சிக்கி தவிக்கும் விவசாயிகள் நலன் கருதி, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>