×

பணி ஓய்வு பெறும் 17 காவல் அதிகாரிகளின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார் காவல் கூடுதல் ஆணையாளர்

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், தலைமையிட காவல் கூடுதல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற காவல் மருத்துவமனை மருத்துவர் உட்பட 17 காவல் அதிகாரிகளின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை காவல் துறையில் பணிபுரிந்து வரும் எழும்பூர் காவலர் மருத்துவமனை மருத்துவர் B.சுந்தர்ராஜ், 7 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 9 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 17 காவல் அதிகாரிகள் வரும் வரும் 30ம் தேதி பணி ஓய்வு பெறுகின்றனர்.

சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின்பேரில், தலைமையிட காவல் கூடுதல் ஆணையாளர் விஜயேந்திர பிதாரி, இன்று வேப்பேரி, சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை காவலில் பணிபுரிந்து வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகின்ற 17 காவல் துறையினர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, சால்வை மற்றும் அணிவித்து பாராட்டி, சான்றிதழ்கள் மாலை வழங்கினார்கள்.

கூடுதல் காவல் ஆணையாளர், ஓய்வு பெறுகின்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தும், பணி ஓய்வு பெறுகின்ற காவல் அதிகாரிகள், அலுவலர்கள் தங்களது உடல் நலத்தையும், குடும்பத்தையும் பேணி காக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் D.N.ஹரிகிரண் பிரசாத், (நலன் மற்றும் குடியிருப்பு) G.சுப்புலட்சுமி, (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் ஒய்வு பெறுகின்ற காவல் அலுவலர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags : Chennai ,
× RELATED பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுப...