சாத்தான்குளம் அரசு கல்லூரியில் கைத்தறி ஆடை கண்காட்சி

சாத்தான்குளம், ஜன. 11: சாத்தான்குளம் அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  கைத்தறி ஆடை கண்காட்சி நடந்தது. சாத்தான்குளம்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி வணிகவியல் துறை மற்றும்  நெல்லை கோ ஆப் டெக்ஸ் சார்பில் கைத்தறி ஆடை கண்காட்சி நடந்தது. தலைமை வகித்த கல்லூரி முதல்வர் சின்னத்தாய், கண்காட்சியை துவக்கிவைத்தார். இதில்   கைத்தறியில் செய்யப்பட்ட புடவை, பட்டுபுடவை, வேட்டி, லுங்கி , தரைவிரிப்பு,  போர்வை  உளளிட்ட பல்வேறு ஆடைகள் இடம் பெற்றிருந்தன. இவற்றை கல்லூரி  பேராசிரியர்கள், கல்லூரி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும்  கைத்தறி ஆடைகளை பயன்படுத்தி கைத்தறி தொழிலாளர்களை ஊக்கப்படுத்திட வேண்டும்   என கண்காட்சியில் வலியுறுத்தப்பட்டது.  ஏற்பாடுகளை கல்லூரி வணிகவியல் துறையினர் செய்திருந்தனர்.

Related Stories:

>