×

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

உடன்குடி, ஜன. 11: அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டதாக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி குற்றம் சாட்டினார். உடன்குடி ஒன்றியம், செம்மறிக்குளம் ஊராட்சி கல்விளையில் மெஞ்ஞானபுரம், லெட்சுமிபுரம், குதிரைமொழி, நங்கைமொழி, செம்மறிக்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக  சார்பில் கிராமசபை கூட்டம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. யூனியன் சேர்மன் பாலசிங் வரவேற்றார். இதில் பங்கேற்ற மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி., மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. இந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தாலும் அதை செய்து தருவதில்லை. மத்திய அரசு எம்பி நிதியிலிருந்து வரும் நிதியை கொரோனா காரணமாக நிறுத்திவிட்டனர். இன்னும் 3 மாதங்களில் வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையபோகிறது.

 அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.  40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தியும் இந்த அரசு கண்டு கொள்ள வில்லை. ஸ்டாலின் விவசாயிகளின் கஷ்டங்களை புரிந்துள்ளார். அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவார். மக்கள் விரோத அதிமுக அரசை தமிழக மக்கள் வரும் தேர்தலில் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்’’ என்றார். கூட்டத்தில் மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜெ.ஜெகன், பிரம்மசக்தி, மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார், மாவட்ட கவுன்சிலர் ஜெசி பொன்ராணி, ஒன்றியச்செயலர்கள் ரமேஷ், நவீன்குமார், செங்குழி ரமேஷ்,  இசக்கிபாண்டி, வக்கீல் பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஜெபராஜ், மாணவர் அணி மாவட்ட  துணை அமைப்பாளர்கள் முகைதீன், அலாவுதீன், மகேந்திரன், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரவிராஜா, இளங்கோ, ஆனந்த், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மெஞ்ஞானபுரம் ஊராட்சி நிர்வாகிகள் ரஞ்சன், ஜோசப், ஜெரால்ட், தானியேல் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

Tags : Kanimozhi ,women ,AIADMK ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...