தூத்துக்குடி மாவட்ட குத்துசண்டை போட்டி

தூத்துக்குடி, ஜன. 11: தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டி நடந்தது.  வயது மற்றும் உடல் எடை பிரிவுகளின் அடிப்படையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. துவக்க விழாவில்  தூத்துக்குடி ஐஎஸ்என் பாக்சிங் கிளப் இணை செயலாளர் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் திரளாகப் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.  இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>