உடன்குடியில் லோடு ஆட்டோ மோதி தொழிலாளி படுகாயம்

உடன்குடி, ஜன. 11:   உடன்குடியில் பைக் மீது லோடு ஆட்டோ மோதியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார். உடன்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (42) கூலி தொழிலாளியான இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள். சம்பவத்தன்று வேலை விஷயமாக பைக்கில் தேரியூர் சென்ற முருகேசன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். உடன்குடி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ இவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த முருகேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த குலசேகரன்பட்டினம் எஸ்ஐ அமலோற்பவம், விபத்து ஏற்படுத்திய லோடு ஆட்டோவை ஓட்டி வந்த உடன்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்துவை கைதுசெய்தனர்.

Related Stories:

>