- ஜெமிமா
- மாண்டனா
- மும்பை
- இந்தியா
- ஜெமிமா ரோட்ரிக்ஸ்
- ஆஸ்திரேலியா
- பிக் பாஷ் லீக்
- பிரிஸ்பேன் ஹீட்
- ஸ்மிருதி மந்தனா
மும்பை: இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆஸ்திரேலியாவின் பிரபலமான மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்று, பிரீஸ்பேன் ஹீட் அணியில் ஆடி வந்தார். முதல் 3 போட்டிகளில் பங்கேற்ற பின்னர் ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்திற்காக ஜெமிமா மும்பை திரும்பினார். இந்நிலையில் மந்தனாவின் தந்தை மாரடைப்பால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதால் கடைசி நேரத்தில் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் மந்தனா மனஉளைச்சலில் இருக்கும் நிலையில் அவருக்கு ஆதரவாக இருக்க ஜெமிமா முடிவு செய்துள்ளார். இதனால் அவர் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க ஆஸி.க்கு செல்லவில்லை. பிக்பாஸ் லீக் தொடரில் ஆடும் ஒரே இந்திய வீராங்கனை ஜெமிமாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
