விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜன.11: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசமரம் பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி பொறுப்பாளர் சையது முஸ்தபா தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராசிரியர் மைதீன், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் முகமது பீர்ஷா, அந்தோணிராஜ்,சேக் அப்துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>