×

பட்டதாரி ஆசிரியராக தகுதி உயர்த்தக்கோரி இடைநிலை ஆசிரியர் சங்கம் பிப்.22ல் காத்திருப்பு போராட்டம்

திருச்சி, ஜன.11: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம் திருச்சி சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் அப்பாத்துரை தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் வெங்கட்ராமன், தலைமையிட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். வரவு செலவு அறிக்கையை மாநில பொருளாளர் பிரகாசம் சமர்ப்பித்தார். சங்க செயல்பாடுகள், எதிர்கால செயல்பாடு குறித்து வேலைஅறிக்கையை மாநில பொதுச் செயலாளர் சங்கர் வாசித்தார். மாநில இணைச் செயலாளர் ஸ்டீபன் நன்றி கூறினார். கூட்டத்தில், ‘அரசு, அரசு உதவிபெறும் நகராட்சி, மாநகராட்சி அரசு உயர், மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் 2005 முதல் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி பிப்ரவரி 22ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும். ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஏழை,எளிய நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். வேளாண் சட்டத்தை திரும்ப பெற்று விவசாயிகளின் போராட்டத்தை கைவிட வழிவகை செய்ய வேண்டும்’ ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : protest ,graduate teacher ,Intermediate Teachers' Association ,
× RELATED பட்டதாரி ஆசிரியர் பணி ஜூனில் தேர்வு...