அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அலட்சியம் செய்ததால் விபரீதம் பொங்கல் பரிசு வழங்க நலவாரிய தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

திருச்சி, ஜன.11: தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிடத் தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் செல்வகுமார் ஆகியோர் திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பதிவுபெற்ற 12.63 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் எத்தனை பேருக்கு வழங்கப்படுகிறது என்பது தெளிவுப்படுத்த வேண்டும். வழங்கப்படும் இடங்கள் மற்றும் தொழிலாளர் எண்ணிக்கை குறித்த விபரங்களை வெளியிட்டு, தொழிற்சங்கங்களுக்கும் தெரியப்படுத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 17 நல வாரியங்களில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>