காணொளி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது

திருச்சி, ஜன.11: நடப்பாண்டுக்கான ஜனவரி மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ளது. திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகிக்கிறார். அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>