திருவாரூரில் நடந்தது 4 மாதத்திற்கு பிறகு திமுக ஆட்சி அமைவது உறுதி

திருவாரூர், ஜன.11: திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தப்பளாம்புளியூர், பழையவலம், ஆமூர், கல்யாணசுந்தரம் உட்பட பல்வேறு ஊராட்சிகளில் திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டமானது திமுக சார்பில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி திருவாரூர் ஒன்றியத்தில் நேற்று தப்பளாம்புலியூர், பழையவலம், ஆமூர், கல்யாணசுந்தரம் உட்பட பல்வேறு ஊராட்சிகளில் மக்கள் கிராமசபை கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் தேவா, அவைத் தலைவர் செல்வராஜ், பொருளாளர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கருணாகரன் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதிரான திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் போன்றவை குறித்து பேசியதுடன் வேலைவாய்ப்பு, இலவச பட்டா, கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மனு அளித்தனர். பின்னர் இந்த கூட்டங்களில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். பின்னர் பேசிய பூண்டி கலைவாணன், தமிழகத்தில் வரும் 4 மாத காலத்திற்கு பின்னர் திமுக தலைமையிலான ஆட்சி அமைவது தற்போது உறுதியாகி விட்டது. எனவே திமுக ஆட்சி அமைந்தவுடன் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories:

>