திருவாரூர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று

திருவாரூர், ஜன.11: திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் வரையில் 11 ஆயிரத்து 24 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா ஒருவர், வலங்கைமானில் இருவர் உட்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 31 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இவர்களில் 81 பேர்கள் மட்டுமே சிகிச்சையில் இருந்து வரும் நிலையில். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 பேர்களும், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் 5 பேர்களும், தனியார் மருத்துவமனையில் 14 பேர்களும் என மொத்தம் 41 பேர்கள் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். மீதம் 40 பேர்கள் சிகிச்சை முடிந்து வீட்டு தனிமையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>