×

திருத்துறைப்பூண்டியில் பொங்கலையொட்டி கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை விறுவிறுப்பு

திருத்துறைப்பூண்டி, ஜன.11: திருத்துறைப்பூண்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. மழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிற நிலையில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் மற்றும் முறை சார்ந்த உறவினர்களுக்கு வரிசை வைப்பதற்காக பொங்கல் பண்டிகைக்கு தேவையான மளிகை பொருட்கள், கரும்பு, மஞ்சள், இஞ்சி போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். பொங்கலுக்கு இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் நாள் நெருங்க நெருங்க கரும்பு, வாழைத்தார், இஞ்சி, மஞ்சள்கொத்து, தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி செல்கின்றனர். தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் கடைவீதிகளில் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

Tags : Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே 2 இருசக்கர...