தஞ்சை,ஜன.11: தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் நாய்களுக்கு விநோத நோய் தாக்கியுள்ளதால், முடிகள் உதிருந்து விகாரமாக உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாநகராட்சிக்கு உட்ப்பட்ட 1 வது வார்டு பள்ளியக்ரஹாரத்தில், சுமார் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் உள்ளன. இப்பகுதியில் சுமார் நுாற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிந்து வருகின்றது. வீட்டில் வளர்க்கும் நாய்கள் மட்டுமின்றி தெருவில் சுற்று நாய்களுக்கு கடந்த சில நாட்களாக நாய்களின் உடலிலுள்ள முடிகள் உதிர்ந்து வருகின்றது. மேலும், முடிகள் உதிர்வதால் ஏற்படும் அரிப்பால், உடல்களை கடித்தும், நகங்களால் கீருவதால், உடலில் ரத்து சொட்டுகிறது. இது போல் நாய்களால் தெருவில் மற்றும் வீடுகளிலுள்ள நாய்களுக்கு பரவுவதால், பள்ளியக்கிரஹாரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு முடி உதிரும் விநோத நோய் வந்துள்ளது. எனவே, தற்போது சீதோஷன நிலை மாற்றத்தால் பல்வேறு நோய்கள் பரவும் நிலையில், தஞ்சை பள்ளியக்கிரஹாரம் பகுதியிலுள்ள நாய்களுக்கு உருவாகியுள்ள வினோத நோய் குறித்து உடனடியாக சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.