×

பொங்கல் சீர் கொண்டு செல்லும் பெற்றோர்கள் தஞ்சை பெரியகோயிலில் இரும்பு சப்பரங்கள் மழையில் நனைந்து துருப்பிடிக்கும் அவலம்

தஞ்சை,ஜன.11: தஞ்சை பெரியகோயிலில் பல லட்ச ரூபாய் செலவில் செய்த இரும்பினாலான சப்பரங்கள் மழையில் நனைந்து துருபிடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை கண்டு கொள்ளாத கோயில் நிர்வாகத்தால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் எனும் பிரகதீஸ்வரர் கோயில் உலக புகழ்பெற்றதாகும். இக்கோயில் கட்டப்பட்டு சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதாலும், கட்டிட கலைக்கும், சிற்பங்களின் நுணுக்கங்களுக்கும் பெயர் பெற்றதாகவும், இதனால் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாவட்ட, மாநில, வெளி நாட்டினர், தரிசனம் செய்வதற்கும், கலைகளை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் வருவார்கள். மேலும் பக்தர்கள் சன்னதியின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தெரிந்து கொள்ளும் வகையில் , அதனை பற்றிய குறிப்புகளை சில்வர் ஸ்டீலில் அச்சடித்து வைத்துள்ளனர்.

மேலும் பக்தர்களுக்கு வருகைக்கு என பல்வேறு வசதிகள் செய்து கொடுத்திருந்தாலும், கோயிலிலுள்ள சுவாமிகள் சென்று வரும் இரும்பினாலான சப்பரத்தை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டுள்ளது வேதனையான விஷயமாகும். தஞ்சை கோயிலிலுள்ள உற்சவர் பெரியநாயகி அம்மன் சமேத பிரகதீஸ்வரர் சுவாமி, முருகன், விநாயகர், நடராஜர், வராகிஅம்மன் உள்ளிட்டஅனைத்து உற்சவ சுவாமிகளும் சென்று வருவதற்கு வாகனங்கள் இல்லாததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்ச ரூபாய் செலவில் மூன்று சப்பரங்கள் தயாரிக்கப்பட்டு, கோயிலுக்கு வழங்கப்பட்டன.

பின்னர் கோயில் விழாவின் போது ஊர்வலம் சென்று வந்த பிறகு,சப்பரத்தை கோயிலின் முன்புறமுள்ள பிரகாரத்தில் வைத்து விடுவார்கள். இதனால் கடுமையான வெயில் மற்றும் பலத்த மழையில், கடந்த சில வருடங்களாக நனைந்து காய்ந்து வருவதால்,சப்பரங்களில் துருபிடித்து வருகிறது. மேலும் கோயிலிலுள்ள அலுவலர்கள், தங்களது வாகனத்தையும், தேவையற்ற பொருட்களையும், சப்பரத்தின் கீழுள்ள பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கின்றனர்.
எனவே,பல லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இரும்பினாலான சப்பரங்களுக்கு, ஷெட் அமைத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும், தவறும் படசத்தில் சப்பரங்களில் துருபிடித்து வீணாகி விடும். இதனால் கோயில் நிதி வீணாகும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : parents ,Pongal Seer ,temple ,Tanjore ,
× RELATED சேலத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 2...