புதுடெல்லி: மிசோரம் போலீசார் ரூ.1.41கோடி மதிப்புள்ள 4.72கோடி ஹெராயினை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மிசோரமில் உள்ள ஐஸ்வால் மற்றும் சம்பாய், அசாமில் உள்ள பூமி குஜராத்தின் அகமதாபாத் ஆகிய இடங்களில் ஈடி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின்போது ரூ.35லட்சம் ரொக்கம் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியா-மியான்மர் எல்லையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல் முறையாக சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
