கறம்பக்குடி அருகே விசி கட்சி பேனர் கிழிப்பு

கறம்பக்குடி, ஜன.11: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன் விடுதி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அக்கட்சியினர் சார்பாக பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். அதில் திடீரென்று அக்கட்சியின் தலைவர் படம் போட்ட பிளக்ஸ் பேனர் பிளேடால் கிழிக்கப்பட்டிருந்ததை கண்டு கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்கட்சியினர் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>