ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்

பொன்னமராவதி, ஜன. 11: பொன் னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியில் ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அழகப்பன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பெரியதம்பி, நலநிதி தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரும் 6ம் தேதி மாவட்ட தலைநகரில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத்தில் இருந்து அதிகளவில் பங்கேற்பது. திருச்சியில் நடைபெறும் பட்டினி போராட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் சரவணன், ஆதிராஜா, சரவணபெருமாள், ராமநாதன், கிருஷ்ணன், அந்தோணி டேனியல், ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>