கொரோனா காலத்தில் முன்னெச்சரிக்கையுடன் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஓவியப்போட்டி

அரியலூர், ஜன.11:அரியலூர் மாவட்டம்கொரோனா பேரிடர் காலத்தில் முன்னெச்சரிக்கையுடன் வாக்களிப்பு குறித்து விழிப்புணா–்வு ஓவியப்போட்டி கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. அரியலூர் கலெக்டர் அலுவலகக்கூட்டரங்கில், கொரோனா பேரிடர் காலத்தில் முன்னெச்சாிக்கையுடன் வாக்களிப்பு குறித்து விழிப்புணா–்வு ஓவியப்போட்டியினை கலெக்டர் ரத்னா தலைமையில் நேற்று நடைபெற்றது. 11வது தேசிய வாக்காளர் தினம் வரும் 25ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு கொரோனா தொற்றுநோய் காலத்தில் 100% வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிசெய்திடும் விதமாக எதிர்வரும் தேர்தலின் போது அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும், கோவிட்-19 நோய் தொற்று நோய் குறித்த முன்னெச்சரிக்கையுடன் வாக்களிப்பது குறித்து தேர்தல் விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.

தேர்தல் விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என சுமார் 43 பேர் கலந்து கொண்டனா–்்.தொடா்ந்து, அரியலூர் தாலுகா குறுமஞ்சாவடியில் பெயா் சோ்த்தல் மற்றும் ஒரே பெயா், ஒரே தகப்பனார் பெயா். ஒரே பாலினம் கொண்ட நபா்கள் தொடா்பான தளஆய்வு பணிகளை கலெக்டர் ரத்னா ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் ஜோதி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, தாசில்தார்கள் குமரையா (தோ்தல்), சந்திரசேகரன், உதவித்திட்ட மேலாளா் சதீஸ் மற்றும் மருத்துவர்கள், செவிலியா–்கள் உட்பட பலா் கலந்து கொண்டனர்.

Related Stories:

>