×

பூத்துக்குலுங்கும் ஆகாய தாமரை மலர்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க கோரி பிச்சை எடுத்து மனு கொடுக்கும் போராட்டம்

பெரம்பலூர்,ஜன.11:, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், ஆட்டோ ரிக்சா தொழிலாளர் நல வாரி யம், தையல் தொழிலாளர் நல வாரியம், ஓவியர்கள் நல வாரியம், மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரி யம் உள்ளிட்ட 17 வகையா ன நலவாரியங்கள் உள்ள ன. இவற்றில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தில் பெரம்பலூர் மாவட்ட அளவிலிருந்து மட்டும் 47 ஆயிரம்பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் தமிழக அரசு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தைச் சேர்ந்த 15ஆயிரம் பேருக்கு மட்டுமே பொங்கல்பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது. மீதமுள்ள சுமார் 30 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்க ல் பரிசுத் தொகுப்பு வழங் கப்படாமல் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளது.எனவே தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வருகின்ற இதர நல வாரியங்களை சேர்ந்த பதிவு செய்த தொழிலாளர்களை தெருவில் நிறுத்திய தமிழக அரசை கண்டித்தும், அனைத்து நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பாகுபாடின்றி வழங்க வலியுறுத்தியும் இன்று(11ம்தேதி) காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பிச்சை எடுத்து மனு கொடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம்.இவ்வாறு அவர் அதில் ெதரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...