×

இன்று நடக்கிறது ஜெயங்கொண்டம் அருகே வீட்டில் மாயமான 60 பவுன் நகை, பணம் மீட்பு

ஜெயங்கொண்டம், ஜன.11: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழழகன். இவருக்கு சுசீலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் சென்னையில் ரயில்வே துறையில் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பரிசு வாங்குவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தவர் அதை வாங்கிவிட்டு திரும்பி சென்னைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரின் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து முயற்சி செய்து திறக்க முடியாததால், பின்பக்கம் உள்ள கிரில் கேட் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பேக், சூட்கேஸ் உள்ளிட்டவைகளை அருகிலுள்ள தைலமர தோப்பிற்கு எடுத்துச் சென்று பிரித்துள்ளனர். அங்கு துணிகள் கலைக்கப்பட்டு கிடந்துள்ளது.
இதில் வீட்டின் பீரோவில் இருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை காணாமல் போனதாக ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அரியலூரில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. இதில் துணிகளோடு கலைந்து டப்பாவில் 60 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் இருந்தது. கொள்ளையர்கள் பதற்றத்தில் நகை உள்ள செல்பை உடைக்காமல் இதர பகுதியில் உள்ள பொருட்களை சிதறவிட்டு தப்பிச் சென்றதால் நகை மற்றும் பணம் தப்பியது. இதனையடுத்து நகை, பணம் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்
படைக்கப்பட்டது்

Tags : home ,Jayangondam ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு