செந்துறையில் விசி செயற்குழு கூட்டம்

அரியலூர், ஜன.11: அரியலூர் மாவட்டம், செந்துறையில் விசி கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமை வகித்தார். மாநில பொறுப்பாளர்கள் தனக்கோடி, கருப்புசாமி, தொகுதி செயலாளர் இலக்கியதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க அரசு மெத்தன போக்கு காட்டுவதை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் விசிகவினர் களப்பணியாளர்கள், பூத் கமிட்டி அமைத்தல், வாக்கு சாவடி முகவர்கள் போன்ற பணிகளை பொறுப்பாளர்கள் செயல்பட இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விசி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More