மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலக பாதையை பொதுப்பணித்துறை சீரமைப்பு

மயிலாடுதுறை, ஜன.11: மயிலாடுதுறை துணைக்காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் பாதையில் சேறு, சகதியை பொதுப்பணித்துறையினர் தினகரன் செய்தி எதிரொலியால் சரி செய்தனர். மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகம் காவல்நிலையத்தை ஒட்டியே அமைந்துள்ள சுற்றுச்சுவரின் நடுவே அலுவலகம் செல்லும் பாதை உள்ளது. அதையொட்டி அனைத்து மகளிர்காவல்நிலையம், மதுவிலக்கு காவல்நிலையம் உள்ளன. தினந்தோறும் இங்கே குறைந்தபட்சம் 500 பேர் வந்து செல்வார்கள். மேலும் டூவீலர்கள், கார்கள் போன்ற வாகனங்கள் சென்று வரும் நிலையில் இந்த வளாகம் சமீபத்தில் பெய்த நல்ல மழையில் சேறு, சகதியாக மாறியது. இதனால் வயதானவர்கள், பெண்கள் குழந்தைகளுடன் வரும்போது தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த டிஎஸ்பி அலுவலக பாதையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்துகொடுக்கவேண்டும் என்று சமூகஆர்வலர்கள் தெரித்திருந்தனர். இந்த செய்தி கடந்த 7ம் தேதி (வியாழக்கிழமை) தினகரனில் படத்துடன் வெளியானது. அதனையடுத்து பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். பொக்லின் இயந்திரம் மூலம் மேடு பள்ளத்தை சரிசெய்து ஜல்லி மற்றும் மணல் கொண்டு பாதையை சீரமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறை, செய்திவெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories:

>