களை பறிக்கும் பணியில் பெண்கள் குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் பயனாளிகள், ெபாதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்

கரூர், ஜன. 11: குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் பயனாளிகள், பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என கரூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டிஆர்ஓ தொிவித்தார். குடியரசு தின விழாவினை கரூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில்,ஆண்டுதோறும் ஜனவரி 26ம்தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.நிகழ்ச்சி நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை நல்ல முறையில் பராமரித்து சீர் செய்து வழங்கும் பணியை நகராட்சித்துறையினர் மேற்கொள்ள வேண்டும். மைதானத்தில் தீத்தடுப்பு வாகனம் மற்றும் சுகாதாரத்துறையினர் அவசர ஊர்தியை பாதுகாப்பு கருதி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நிகழ்ச்சிக்கு வருகைதரும் போராட்ட தியாகிகளை நல்ல முறையில் உபசரித்து கவனித்துக் கொள்ள வேண்டும். அனைத்து அரசுத்துறைகளும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக பயனாளிகளை தேர்வு செய்து பட்டியலை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) ஒப்படைக்க வேண்டும். முக்கிய பிரமுர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர வசதியாக சாமியானா பந்தல் அமைத்தல், விளையாட்டு மைதானத்தில் குடிநீர் வசதி, நடமாடும் கழிப்பறை போன்றவை ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழையும் போது, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள், கொடிகளை பயன்படுத்தக் கூடாது என்றார். கூட்டத்தில், நேர்முக உதவியாளர் (பொது) சந்தியா, கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஹஸ்ரத்பேகம் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>