டிஆர்ஓ பேச்சு போட்டி தேர்வுகளுக்கு இலவச இணையவழி பயிற்சி

கரூர், ஜன. 11: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள பட்டப்படிப்பு அளவில் நடத்தப்படும் முதனிலை தேர்வு மே 29ம்தேதி முதல் ஜூன் 7ம்தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 31ம்தேதியாகும். இந்த தேர்வுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் 8ம்தேதி முதல் இணையவழி செயலி மூலமாக கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் துவங்கப்படவுள்ளன. பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகள், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாட்கள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் தங்களின் விபரங்களை 9360557145, 04324-223555 என்ற தொலைபேசி வாயிலாக அல்லது கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரிடையாக தொடர்பு கொண்டு தங்களுடைய வாட்ஸ்அப் கைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ளலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>