×

சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள்


கரூர், ஜன. 11: தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் நடப்பாண்டில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் திட்ட இலக்கு பெறப்பட்டு விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் பழச்செடிகள், காய்கறி விதைகள் மற்றும் நாற்றுக்கள் வழங்க இலக்கு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் வெங்காயம் சாகுபடி பரப்பு விரிவாக்கம், பந்தல் சாகுபடி, முட்டுக்கொடுத்தல், இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை போன்றவற்றிக்கான திட்டங்கள் இலக்கு பெறப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்த தண்ணீரில் அதிக பரப்பளவில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு வசதியாக நுண்ணீர் பாசனக் கருவிகள் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் அரசு அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்பாசன நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.சிறப்பினத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீதம் மற்றும் 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 5000 எக்டேர் பரப்பில் இலக்கீடு பெறப்பட்டு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கருவிகள் நிறுவப்பட்டு வருகிறது. மேலும், மரங்கள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் விதைப்பந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. பழச்செடிகள், காய்கறி விதைகள் மற்றும் நுண்ணீர் பாசனக் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Community Activists ,
× RELATED சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்...