கரூர் வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் படிந்துள்ள மண் துகள்களை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை

கரூர், ஜன. 11: கரூர் வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் படிந்துள்ள மண் துகள்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து திண்டுக்கல், பாளையம், குஜிலியம்பாறை போன்ற பகுதிகளுககு செல்லும் அனைத்து வாகனங்களும் கரூர் திருச்சி பைபாஸ் சாலையிடையே கட்டப்பட்டுள்ள வெங்ககல்பட்டி மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, மேம்பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் அதிகளவு மண்படர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மேம்பாலத்தை கடக்க சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில், மேம்பாலத்தின் இருபுறமும் படிந்துள்ள மணல்பரப்புகளை அகற்ற தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories:

>