மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

கோவை,ஜன.11: ேகாவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்குவிற்கான சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளனர். பல்வேறு இடங்களில் டெங்கு விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் டெங்குவிற்கு 39 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். மேலும், கடந்த 10 நாட்களில் 12 பேர் சிகிச்சைபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மருத்துவமனையில் டீன் காளிதாஸ் கூறுகையில், “கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக தற்போது 4 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதையடுத்து, குழந்தைகள் வார்டு மற்றும் தனியாக டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் தலா 10 படுக்கை வசதிகள் உள்ளது. டெங்கு அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு இங்கு வைத்து சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக, சிறப்பு மருத்துவக்குழுவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

Related Stories:

>