×

துறைமுகம் தொகுதியில் புதிதாக 269 குடியிருப்புகள் கட்டும் பணி தொடக்கம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: துறைமுகம் தொகுயில் ரூ.55 கோடியில் 269 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு வசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் 1970 ஆண்டு கலைஞரால் தொடங்கப்பட்டது. இத்திட்டப்பகுதி 1995ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் 6 தொகுப்புகளாக 234 குடியிருப்புகள் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்டது. தட்ப வெப்ப சூழ்நிலையின் கராரணமாக இக்கட்டடம் பழுதாகிவிட்டதால் இடிக்கப்பட்டு மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.54.11 கோடி மதிப்பீட்டில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 269 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது.

இந்த புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 411 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மின்தூக்கி, மின்னாக்கி ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல குழு தலைவர் ராமுலு , மாமன்ற உறுப்பினர் இசட்.ஆசாத், தலைமை பொறியாளர் லால் பகதூர், மேற்பார்வை பொறியாளர் (பொ) இளம்பரிதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : port block ,Minister ,Sekharbhabu ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர்...