ஈரோடு மாவட்டத்தில் 37.80 மி.மீ., மழை

ஈரோடு,ஜன.11: ஈரோட்டில் கடந்த சில நாட்களாக  பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் மதியம் முதல்  மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணிக்கு திடீரென இடி-மின்னலுடன் பரவலாக  மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியும்,  சாக்கடை நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. இதேபோல்,  ஈரோட்டின் சுற்றுப்புற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.  இதில்,  மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம்:  ஈரோடு- 11மி.மீ (மில்லி மீட்டர்), பெருந்துறை-16, கோபி-5,  நம்பியூர்-3, எலந்தகுட்டை மேடு-1 என மொத்தம் 37.80 மி.மீ., மழை  பொழிந்தது.

Related Stories:

>