×

வ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர் கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி

ஈரோடு, ஜன. 11: ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் மகாவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் அனுமன் ஜெயந்தி விழாவை எளிமையாக நடத்திக்கொள்ள அனுமதி அளித்தது. இது தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் தலைமையில் கோயில் நிர்வாகிகள், அறநிலையத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், விழா அன்று, அன்னதானம், திருவீதி உலா, தேர் இழுத்தல், வியாபார கடை அமைத்தல், பொழுதுபோக்கு, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.
 
அனுமன் ஜெயந்தியான நாளை  காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கலாம். முக்கிய நிகழ்வுகளில் அதிகபட்சம் கோயிலுக்குள் 50 பேர் முதல் 100பேர் வரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடுகள் விதித்து, ஆர்.டி.ஓ. அனுமதி அளித்தார். இதன்படி, அனுமன் ஜெயந்தி தினமான நாளை அதிகாலை 3 மணிக்கு மகா கணபதிக்கு அபிஷேகம், 4 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், 5 மணிக்கு மலர் அலங்காரம், மதியம் 1.30 மணிக்கு வடை மாலை சாற்றுதல், மாலை 5 மணிக்கு மூலவருக்கு வெள்ளிகவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags : Hanuman Jayanti ,Park Anjaneyar Temple ,
× RELATED வஉசி பூங்கா ஆஞ்சநேயர் கோயிலில் நன்கொடை செலுத்த கியூஆர் கோடு அறிமுகம்