சண்டிகார்: அரியானாவில் வாரந்தோறும் விஐபி மற்றும் பேன்சி எண்கள் ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை, ஏலதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம். பின்னர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ஏலம் நடைபெறம். இந்த ஏலம் அதிகாரப்பூர்வ fancy.parivahan.gov.in போர்ட்டலில் முழுமையாக ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த வாரம், ஏலத்திற்கு வந்த அனைத்து எண்களிலும், ‘HR88B8888’ என்ற பதிவு எண்ணுக்கு மொத்தம் 45 விண்ணப்பங்கள் வந்தன. அடிப்படை ஏல விலை ரூ. 50,000 என நிர்ணயிக்கப்பட்டது. இது ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது, பின்னர் மாலை 5 மணிக்கு ரூ. 1.17 கோடிக்கு முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் HR88B8888 என்ற எண் இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த கார் பதிவு எண்ணாக ரூ.1.17 கோடிக்கு மாறியுள்ளது.
