- Periyapalayam
- Uthukkottai
- ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து அலுவலகம்
- செங்குன்ராம்
- தாகுளம்
- கண்ணிக்கைப்பர்
ஊத்துக்கோட்டை, நவ.27: ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து செங்குன்றத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை நோக்கி சென்றது.
அப்போது, பெரியபாளையம் அடுத்த, கன்னிகைப்பேர் அருகே தானாகுளம் என்ற பகுதியில் சென்றபோது முன்னாள் கற்கள் ஏற்றி சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், அரசு பேருந்து லாரியின் பின்னால் மோதியது. இதில், பேருந்தின் முன் பக்க கண்ணாடி நொறுங்கியது. இதில், டிரைவர் மற்றும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
