- கருணை
- சட்டமன்ற உறுப்பினர்
- சேலம்
- சேலம் எஸ்.பி
- ராமதாஸ்
- பட்டாலி மக்களவைத் கட்சி
- அருள்
- பாலமகா தெற்கு மண்டலம்
சேலம், நவ.27: அருள் எம்எல்ஏ தரப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சேலம் எஸ்.பி.யை சந்தித்த தென்மண்டல பாமக பொறுப்பாளர் கூறினார். பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் ஆதரவாளர்களான அருள் எம்எல்ஏ, பாமக தென் மண்டல பொறுப்பாளர் பாஸ்கர் ஆகியோர் சேலம் மாவட்ட எஸ்.பி. கவுதம் கோயலை சந்தித்து புகார் மனுவை கொடுத்தனர். பின்னர் பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: ஏத்தாப்பூர் பக்கமுள்ள வடுகத்தம்பட்டியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற அருள் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகளை தாக்கியது அன்புமணி தலைமையிலான கும்பலை சேர்ந்தவர்கள். ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த அருள் எம்எல்ஏ உள்ளிட்டோர் மீது வற்புறுத்தி வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளனர். எனவே தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி எஸ்.பி.யை சந்தித்து தெரிவித்தோம். இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். அவர்களை மீண்டும் கைது செய்ய வேண்டும். கிழக்கு மாவட்ட செயலாளர் நடராஜனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். நாங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தவில்லை. அன்புமணி தரப
