×

பறவைக்காய்ச்சல் எதிரொலி சாத்தூரில் கோழிக்கறி கிலோ ரூ.50 விற்பனை

சாத்தூர், ஜன.11: பறவைக்காய்ச்சல் எதிரொலியாக சாத்தூரில் ஒரு கிலோ கோழிக்கறி 50 ரூபாய்க்கு விற்பனையானது. சாத்தூர் பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகளவில் கறி வாங்குவது வழக்கம். ஆட்டுக்கறி, மீன் விலை அதிகமாக இருப்பதால் நடுத்தர, ஏழை மக்கள் அதிகளவில் கோழிக்கறியை வாங்கி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக பறவைக்காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழிக்கடைகளில் கறி வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கறி விற்பனை மந்தமாக உள்ளது. ஒரு கிலோ கோழிக்கறி 50 ரூபாய்க்கு விற்பனை செய்தும் பொதுமக்கள் கறி வாங்க வருவதில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Sattur ,
× RELATED தொழில் போட்டியில் தொழிலாளியை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் சிறை