காரியாபட்டியில் ரூ.35 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல்

காரியாபட்டி, ஜன. 11: காரியாபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கல்குறிச்சி கிராமத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான ரேஷன் கடை, அச்சங்குளத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான சமுதாய கூடம், வடகரை கிராமத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான சமுதாயகூடம், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திமுக விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் பல நல்ல திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று கூறினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், ஒன்றிய வைஸ் சேர்மன் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>