விருதுநகரில் மாணவி மாயம்

விருதுநகர், ஜன.11: விருதுநகர் அல்லம்பட்டி பாரதி நகரை சேர்ந்த தவசுபாண்டீஸ்வரியின் கணவர் இறந்த நிலையில் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரு மகள், ஒரு மகனும் உள்ளனர். 18 வயதான மகள் படிக்க வசதியில்லாத நிலையில் பிஏ படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>