பொதுமருத்துவ முகாம்

பெரியகுளம், டிச. 11: பெரியகுளத்தில் சி.எஸ்.ஐ., ஆர்.சி, டி.இ.எல்.சி ஆகிய கிறிஸ்தவ  திருச்சபைகள் மற்றும் தேனி வைகை ஸ்கேன் சார்பில், வடகரை சி.எஸ்.ஐ சர்ச்சில் பொது மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் பாண்டிராஜன் தலைமையில் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். முகாமுக்கு தென் இந்திய  திருச்சபை தலைவர் ஸ்டாலின் பிரபாகர் தலைமை வகித்தார். டி.இ.எல்.சி.  சர்ச் பாதர் தாமஸ் முன்னிலை வகித்தார். கத்தோலிக்க திருச்சபை பங்குத்தந்தை  பாப்புராஜ் முகாமை துவக்கி வைத்தார்.

 சி.எஸ்.ஐ மற்றும்  டி.இ.எல்.சி திருச்சபை நிர்வாகிகள் வரவேற்றனர். முகாமில்,  ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் முதல்வர் பிரிட்டோ, செல்லத்துரை,  மனோகரன், சகாயராஜ் உட்பட சர்ச் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு முழு உடல் பரிசோதனை, ரத்த அழுத்த நோய், சர்க்கரை  நோய் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டு, மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இனியன்  கடுங்கோன் செய்திருந்தார்.

Related Stories:

>