ஆண்டிபட்டி அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி மர்மநபர்களுக்கு போலீசார் வலை

ஆண்டிபட்டி, ஜன. 11: ஆண்டிபட்டி அருகே அரசு வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே, சக்கம்பட்டி பகுதியில் தேனி-மதுரை சாலையில் அரசு வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வந்த மர்மநபர்கள், அங்கிருந்த ஏடிஎம்மை மெஷினை உடைத்து பணத்தை திருட முயன்றனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த மர்மநபர்கள், அங்கிருந்து தப்பியோடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஆண்டிபட்டி போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>