மைத்துனரை வெட்டியவர் கைது

பெரியகுளம், ஜன. 11: விருதுநகர் மாவட்டம், சிவகாசி நாராணபுரம் விநாயகர் காலனியை சேர்ந்தவர் சபரிராஜ் (25). இவரது சகோதரியை,  பெரியகுளம் முருகமலை நகர் வடக்குத்தெருவைச் சேர்ந்த சென்னகேசவன் (47) திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சென்னகேசவன் மனைவியை அடிக்கடி  அடித்து டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை சபரிராஜூம், அவரது  அண்ணனும் பெரியகுளத்திற்கு வந்து சென்னகேசவனிடம் ஏன்  அக்காவை அடித்து டார்ச்சர் செய்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சென்னகேசவன், சபரிராஜூவை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சபரிராஜ் அளித்த புகாரின்பேரில், பெரியகுளம் வடகரை போலீசார்  வழக்கு பதிவு செய்து, சென்னகேசவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>