×

சிவாலயங்களில் பிரதோஷ விழா

கமுதி, ஜன.11: கமுதி-மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நேற்று பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், திரவியபொடி, திருநீறு, மஞ்சள், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், இளநீர் உட்பட 12 வகையான அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். இதேபோல் மண்டலமாணிக்கத்தில் உள்ள அரும் பவள நாயகி சமேத கைலாயநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தீஸ்வரருக்கு நடைபெற்ற அபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : festival ,Shiva ,temples ,
× RELATED க.பரமத்தி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு