இளையான்குடி அருகே போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு சிறப்பு முகாம்

இளையான்குடி, ஜன.11: இளையான்குடி அருகே கோட்டையூரில் போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகஜன் தலைமை தாங்கி பேசுகையில், போலீஸ், பொதுமக்கள் நல்லுறவுடன் இருக்க வேண்டும், கிராமங்களில் நடைபெறும் சட்ட விதி மீறல்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தரப்பட்ட வாட்ஸ் அப் எண்ணில் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் தெரிவிக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும் என்றார்.

முகாமில் சிவகங்கை மாவட்ட ஏடிஎஸ்பி முரளிதரன், டிஎஸ்பி முத்துமாணிக்கம், இளையான்குடி இன்ஸ்பெக்டர் பரணிதரன், சாலைக்கிராமம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், மற்றும் ஒன்றிய தலைவர் முனியாண்டி, ஊராட்சிமன்ற தலைவர்கள் அனிதாசைமன், திருப்பதி, அமுதா பெரியசாமி, கவுன்சிலர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் கோட்டையூர், சிறுபாலை, புலியூர், தெற்கு கீரனூர், அரியாண்டிபுரம், கல்வெளிப்பொட்டல், வாணி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>